இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு…

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு…

படித்த, வேலை வாய்ப்புக்காக, முயற்சி செய்து கொண்டிருக்கும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தரவேண்டும் என்ற உயரிய கொள்கையினை அடிப்படையாக கொண்டு, விடியல் வளர்ச்சி பேரணி (VVP) இயங்கிக்கொண்டிருப்பதை அறிவீர்கள். இதற்க்காக, பல தொழில் நிறுவனங்களையும், சேவை நிறுவனங்களையும் சந்தித்து, சில வேலை வாய்ப்புகளை பெற்று, VVPஇன் Website மற்றும் Facebook பக்கங்களில் பதிவிட்டோம். இதன் மூலம் சில இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றார்கள். பல லட்ச படித்த, வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் இருக்கையில், சில வேலைவாய்ப்புகளை பெறுவதால் மட்டும், தமிழக இளைஞர்களின் பிரச்சனைகள் தீர்ந்து விட போவதில்லை. நாம் பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை பெற்று தரவேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்றுகிறோம். நாம் ஒன்றுபட்டால், உங்கள் ஒத்துழைப்பும் இருந்தால், நாம் பல…

Read More Read More

தொழிலாளர் தினம்…

தொழிலாளர் தினம்…

“உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள், உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்..!! “ இன்று மே மாதம் 1ஆம் நாள். உலகத் தொழிலாளர் தினம். இந்த நாகரிக உலகை செதுக்கிய சிற்பிகளின் தினம். இந்த உன்னத நாளிலே இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டி இருக்கிறது. இன்று வேலையில்லாதவர்கள் அதிகம் வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது என்ற கசப்பான உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் அதிகம் வாழும் நாடும் இந்தியா தான். வேலையில்லாதவர்கள் அதிகம் வாழும் நாடும் இந்தியா தான். சமத்துவமற்ற பொருளாதாரம் இங்கே நிலவுகிறது. நாட்டின் 70% சொத்துக்களின் உடைமையாளர்கள் 57 பேர் மட்டுமே. சுய வேலை வாய்ப்புகளும், புதிய வேலைகளும் குறைந்துக்கொண்டே வருகிறது. புதிய மோட்டார் வாகன சட்டப்படி, மோட்டார்…

Read More Read More

இளநிலை உதவியாளர்கள் மற்றும் வி.ஏ.ஓ உள்ளிட்ட 9350 காலி பணியிடங்களுக்கு 17 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வாணைய தேர்வு எழுதினார்கள். இதில் பி.ஹச்.டி பட்டம் பெற்றோரும் அடங்குவர். இன்னும், பலலட்சம் பேர் ‘வேலை கிடைக்காது‘ என்ற அவநம்பிக்கையால் தேர்வு எழுதாமல் இருந்திருக்கலாம். நாட்டில் வேலையில்லாத  நிலைமை இப்படி இருக்க, மத்திய உயர் அமைச்சர், “பக்கோடா விற்பதும் ஒரு வேலை வாய்ப்புதான்” என்று பேசி இருக்கிறார். வேலையில்லாத பிரச்சனையை, வாழ்வாதார பிரச்சனையை எவ்வளவு துச்சமாக இந்த அரசுக்கள் எடுத்து கொள்கின்றன?

நம் நாட்டின் மிகப்பெரிய வங்கி பாரத ஸ்டேட் வங்கி. இவ்வங்கி நஷ்ட கணக்கு கட்டி இருக்கிறது. பெரும்பாலான வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்டுகிறார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஒரு கிளையில் மட்டுமே ரூ. 11,500 கோடி  மோசடி நடந்திருக்கிறது. இந்திய வங்கிகளுக்கு ஏற்கனவே ரூ. 10 லட்சம் கோடிக்கு வாரா கடன் உள்ளது. இந்த அளவுக்கு மோசடிகளும், முறை கேடுகளும் அரங்கேற காரணமான உயர் அதிகாரிகளை பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது. மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சேமிப்பு பணத்தை வைத்து முறைகேடு செய்யும் இவர்களுக்கு எவ்வளவு பெரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும்? அனால், இதையெல்லாம் தேசிய விவாதம் ஆக்காமல், மௌனமாக கடந்து செல்லும் மக்களை பற்றியும், அரசியல் கட்சிகளை பற்றியும் என்ன சொல்வது?

லஞ்ச ஊழலால் தடிப்பறிக்கப்படும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு

லஞ்ச ஊழலால் தடிப்பறிக்கப்படும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு

விடியல் வளர்ச்சி பேரணி, இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி. தமிழக அரசியலிலே ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வெண்டும் என்ற நோக்கத்திலே ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கம். அரசியலிலே தூய்மையும், வெளிப்படைத் தன்மையும், நியாயமும், நேர்மையும் நிலவ வேண்டும் என்பதே கொள்கை. எங்களுக்கு அரசியல் சித்தாந்தங்கள் இல்லை. நாங்கள் பொதுவுடமை தோழர்களும் அல்ல. தனியார் மய ஆதரவாளர்களும் அல்ல. உலக மயமாக்கல் ஆதரவாளர்களும் அல்ல. அரசு சேவைகள் லஞ்சம், ஊழல் இன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும். எங்களுடைய திறமையான நிர்வாக செயல்பாடுகள் மட்டுமே பேசப்படவேண்டும் என்பதே கொள்கை. வேலை வாய்ப்பில் தமிழகம் முன்னேற வேண்டுமானால், ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் நிறுவப்பட வேண்டும். லஞ்ச, ஊழல் இல்லாத நேர்மையான…

Read More Read More

விடியல் வளர்ச்சி பேரணி

விடியல் வளர்ச்சி பேரணி

விடியல் வளர்ச்சி பேரணி 37-B, Keela Street, Ichikamalaipatti, K.Sathanur Post, Tiruchirappalli – 620 021. Tamilnadu. Mobile: 98655 76210, Mail: vvp2015@rediffmail.com விடியல் வளர்ச்சி பேரணி, இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி. தமிழக அரசியலிலே ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வெண்டும் என்ற நோக்கத்திலே ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கம். அரசியலிலே தூய்மையும், வெளிப்படைத் தன்மையும், நியாமும், நேர்மையும் நிலவ வேண்டும் என்பதே கொள்கை. இப்படிப்பட்ட கொள்கைகளின் மூலம்தான், இன்று நாட்டிலே புற்றுநோயாகப் பரவிக் கிடக்கும் லஞ்சம், ஊழல் நிர்வாக சீர்கேடுகளை விரட்ட முடியும். இக்கட்சி மா.விஜயமோகனாஜி என்பவரால் 01.01.2015 அன்று ஆரம்பிக்கப்பட்டது. மா.விஜய மோகனாஜி இக்கட்சியின் பொதுச் செயலாளராக தலைமை தாங்கி…

Read More Read More

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே….

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே….

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இயங்கும் அமைப்பில், ரூ.350 கோடி ஊழல் என்று தொடரப்பட்ட ஒரு வழக்கில், மும்பை உயர்நீதி மன்ற நீதிபதி திரு.அருண் சவுத்ரி அவர்கள், அரசுத் துறையில் ஊழல் கொடூரமாக வளர்ந்து விட்டது, அடிப்படை வசதிகளை பெறக் கூட லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளார். அரசுத்துறை லஞ்சம் ஊழலை வெகுவாக சாடிய, மும்பை உயர்நீதி மன்ற நீதிபதி திரு.அருண் சவுத்திரி, ‘அரசுத் துறையில் நிலவும் லஞ்சத்தை ஒழிக்க, மக்கள் வரி செலுத்தாமல் ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும்’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார். சுயநல நோக்கோடு, குறுக்கு வழியில் புகுந்து, எப்படியாவது தனக்கு ஆதாயம் தேடிக் கொள்ள வேண்டும் என்று பலரும் விரும்புவதால் தான், இன்று லஞ்சமும், ஊழலும் எல்லா துறைகளிலும்…

Read More Read More

விடியல் வளர்ச்சி பேரணி

விடியல் வளர்ச்சி பேரணி

விடியல் வளர்ச்சி பேரணியின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அதன் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் காக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான செயல்பாடுகளே நம் தனித்தன்மை. இங்கே தலைவர், தொண்டர் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருக்கும் சம உரிமையும், கடமையும் உண்டு. நம்முடைய செயல்பாடுளில் உண்மை, நேர்மை, மக்கள் நலன் மட்டுமே நிறைந்திருக்கும். லஞ்சம் ஊழலை ஒழிப்பதற்கான அனைத்து வழிகளையும் கையாளுவோம். ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே நம் முதன்மைப் பணி குடிதண்ணீர், கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள இவை ஏழைகளுக்கு இலவசமாகவும், தரமாகவும் கிடைக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களும், பத்திரிகைகளும் ஒருசேர ஜல்லிக்கட்டு வேண்டும் என்று குரல் கொடுக்க அதை மத்திய மாநில அரசுகளால் கொண்டு வர முடிந்ததா? இவர்களா…

Read More Read More

ஏழைகளின் வாழ்க்கைத் தரம் எப்படி உயரும்? அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கிறதா? வேலை வாய்ப்புகள் கிடைகிறதா? விலைவாசிகள் தான் குறைந்துவிட்டதா? அடிப்படை வசதிகள் தான் கிடைக்கிறதா? எதுவுமே இல்லை என்கிற போது எதற்காக இங்கே அரசுகள் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தான் கோடிகளை குவிக்கிறார்களே தவிர பாமர மக்களுக்கு இந்த ஆட்சியால் எந்த பயனும் இல்லை. விடியல் வளர்ச்சி பேரணி ஒரு புதிய அரசியல் கலாச்சாரமாக உருவெடுத்திருக்கிறது. அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழலை அறவே ஒழிப்பதே நம் நோக்கம். லஞ்சம், ஊழல் ஒழிந்தால் வளர்ச்சித் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக போய்ச் சேரும். ஊழல் ஒழிந்தால் நாட்டில் தொழில்கள் பெருகும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் பெருகும். லஞ்சம் ஒழிந்தால்…

Read More Read More