அரசு அலுவலகங்களில் லஞ்சம்
ஆசிரியர் பணியிட மாறுதலில் 10000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யபட்டுள்ளனர். இடமாறுதலுக்கு ரூ 5 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுகிறது. இதுபோல அரசுத்துறை அனைத்திலும் குறிப்பாக வணிகவரித்துறை காவல்துறை பத்திரபதிவுதுறை சு.வு.ழு ஏ.ழு தாலுகா அலுவலகங்கள் ரெவினியூ துறை இதுபோன்ற பணம் புழங்கும் அனைத்து துறைகளிலும் வேண்டி இடம் மாறுதல் பெறுவதற்கு ரூ.10லட்சம் 20லட்சம் கூட லஞ்சம் பெறப்படுகிறது. இந்த தொகை உயர் அதிகாரிகளிலிருந்து மந்திரிகள் வரை செல்கிறது. இதனால் பொது மக்களுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கிறீர்களா?
ஏன் இப்படி லஞ்சம் கொடுத்து முக்கிய இடங்களுக்கு மாறுதல் பெறுகிறார்கள்? அவர்கள் மொழியில் அதெல்லாம் நல்ல வருமானம் வரக்கூடிய இடங்கள். அதாவது லஞ்சம் அதிகமாக புழங்கக் கூடிய இடங்கள். இங்கு இடமாறுதல் பெற்றால் பலமடங்கு லஞ்சமாக பெற்று விடலாம் என்ற எண்ணம்தான் காரணம்.
ஒரு அரசு அதகாரியிடம் லஞ்ச ஒழிப்பு பற்றி பேசினேன். அவர் தனது கதையை கூறினார். அவருக்கு திருச்சி சொந்த ஊர். தஞ்சாவூரில் பணி. தினமும் திருச்சியிலிருந்து தஞ்சை சென்று வருவார். திருச்சிக்கு இடமாறுதல் கேட்டார். உயர் அதிகாரி ரூ.5லட்சம் லஞ்சம் கேட்டார். இவரும் தருகிறேன் என்று சென்னாரே தவிர கொடுக்க தாமதம் செய்தார். இவரை சிதம்பரத்திற்கு மாற்றிவிட்டார்கள். தினமும் திருச்சியிலிருந்து சிதம்பரம் போய் வந்து நொந்து போய்விட்டார். 2 ஆண்டுகள் இப்படி அலைந்து பிறகு ரூ.5லட்சம் கொடுத்து திருச்சிக்கே இடமாறுதல் பெற்றாராம். இவ்வளவு சிரமப்பட்டு செலவழித்து திருச்சிக்கு மாறுதல் பெற்ற நான் போட்ட பணத்தை எடுக்காமல் எப்படி இருக்க முடியும் என்கிறார்.
இன்னொரு அதிகாரி சொல்கிறார் ‘அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தினால் தான் நாங்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்த முடியும்’ என்றார். இதெல்லாம் நியாயமான வாதமாகாது. அரசின் உயர் நிர்வாகம் லஞ்ச ஊழலை அடியோடு ஒழிக்க உறுதியான நடவடிக்கைள் எடுத்தால் தான் எல்லா மட்டத்திலும் லஞ்சம் ஊழல் ஒழியும். நேர்மையான நிர்வாகத்தை கொண்டு வர இளைஞர்கள் விடியல் வளர்ச்சி பேரணியுடன் கைகோர்க்க வேண்டும்.