ஆற்று மணல் கடத்தல்
தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு மணல் அதிக அளவு கடத்தப்படுகிறது. 04.02.2015 அன்று ஒரே நாளில் 257 லாரி மணல் கர்நாடகா எல்லையில் அந்த அதிகாரிகளால் பிடிப்பட்டது. தமிழ்நாடு பொதுப் பணி துறை ஒரு யூனிட் ரூ 500 வீதம் ஒரு லாரிக்கு 3 யூனிட் மணலைரூ1500க்கு விற்கிறது. அதை தனியார் 1 யூனிட் ரூ7000க்கு விற்கிறார்கள். இந்த மணலை கர்நாடகா மாநிலத்தில் ரூ12000க்கு விற்கப்படுகிறது. இந்த மணல் திருச்சி கரூர் நாமக்கல் மாவட்ட காவரி ஆற்று குவாரிகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இதை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருப்பு வைத்து பின் கர்நாடகாவுக்கு கடத்துகிறார்கள். இதே போல் கேரளா ஆந்திராவுக்கும் மணல் கடத்தப்படுகிறது. ஆற்றுப்படுகைகளில் மணல் உருவாக 10 லட்சம் ஆண்டுகள் ஆகும் என்று சொல்கிறார்கள். ஆனால் சிறிதும் மனசாட்சி இன்றி ஆற்றுமணலை கொள்ளையடிக்கிறார்கள். நமது அண்டை மாநிலங்களில் இயந்திரம் கொண்டு ஆற்று மணலை அள்ள கூடாது என்று கடும் சட்டம் இருக்கிறது. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கைகோர்த்துக் கொண்டு மணல் கொள்ளையை அரகேற்றுகிறார்கள். இதனால் முற்றிலும் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான்.