அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள்

அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள்

தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. பொதுமக்களிடம் தாங்களே கைநீட்டி லஞ்சம் வாங்கிய நிலைபோய் இப்போது லஞ்சம் வாங்கிக் கொடுப்பதற்காகவே அங்கே வெளியாட்களை நியமித்திருக்கிறார்கள். அரசுப் பணியாளர்கள் போலவே இவர்கள் அந்த அலுவலகத்தில் வேலை செய்வார்கள். உதாரணமாக பத்திரப்பதிவு அலுவலகமாக இருந்தால் நிலமதிப்பை நிர்ணயம் செய்வது, ஆவணங்கள் தயார் செய்வது, பதிவாளரிடம் ஆவணங்களை விளக்கி கையெழுத்து பெறுவது, பேரம் பேசுவது என்று எல்லாமே இவர்கள் மூலமாகவே நடைபெறும். வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் தாலுகா அலுவலகங்கள் என்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்த இடைத்தரகர்களின் அட்டகாசங்கள் தாங்க முடியாது. லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டாலும் இந்த இடைத்தரகர்கள் தான் மாட்டுவார்களே அன்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தப்பித்து விடுகிறார்கள். இது போன்ற இடைத்தரகர்களை ஒழிக்க அரசு கடுமையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

Comments are closed.