உடைந்து விழுந்த புதிய தடுப்பணை

உடைந்து விழுந்த புதிய தடுப்பணை

திருவள்ளுர் மாவட்டம பெரிய பாளையம் அருகே திருக்கண்டலம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கடந்த ஆண்டு 33 கோடி ரூபாயில் கட்டப்பட்ட தடுப்பணை வாயை பிளந்து விட்டது. எந்த அளவுக்கு இதில் லஞ்சமும் ஊழலும் விளையாடி இருந்தால் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை இப்படி ஓர் ஆண்டிற்குள்ளாகவே இடிந்துவிழும். மக்கள் வரிப்பணம் எந்த அளவுக்கு வீணடிக்கப்படுகிறது என்பதற்கு இது உதாரணம். இதற்கு பொறுப்பானவர்கள் அனைவரின் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டாமா? இப்படி ஒவ்வொரு ஆண்டும் தடுப்பணைகள் கட்டுவதும் மழைக்கு உடைவதுமாக இருந்தால் மற்ற வளர்ச்சி திட்டங்கள் எப்படி நடைபெறும்?
முன்பெல்லாம் புதிதாக போடப்பட்ட சாலைகள் தான் ஒரு மழைக்கே தாக்குப் பிடிக்காமல் குண்டும் குழியுமாக ஆகிவிடும். இப்போது தடுப்பணைகளும் அதுபோல் ஆகின்றன. பாதுகாப்புக்காவும் தண்ணீர் சேமிப்புக்காவும் கட்டப்படும் தடுப்பணைகள் உடைந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டால் அதனால் கிராம மக்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் எவ்வளவு சேதம் ஏற்படும் என்பதை அரசு அதிகாரிகள் சிந்திக்கிறார்கள்?
இது போன்ற அரசு ஒப்பந்த வேலைகளுக்கு தரக்கட்டுப்பாட்;டு நிறுவனங்களின் சான்றிதழ் பெறப்பட வேண்டும். அப்படி சான்றிதழ் பெறப்பட்ட வேலைகளுக்கு மட்டுமே பணம் வழங்கப்பட வேண்டும் தரமில்லாத கட்டு மானத்திற்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஒப்பந்ததாரருமே ஏற்க வேண்டும். அவர்களிடமிருந்து நஷ்டஈடு வசூலிக்க வேண்டும். இப்படிப்பட்ட கடும் நடவடிக்கைகள் அரசு எடுத்தால்தான் ஒப்பந்த வேலைகளில் தரம் இருக்கும்.

Comments are closed.