Browsed by
Month: January 2016

விடியல் வளர்ச்சி பேரணி

விடியல் வளர்ச்சி பேரணி

விடியல் வளர்ச்சி பேரணியின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அதன் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் காக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான செயல்பாடுகளே நம் தனித்தன்மை. இங்கே தலைவர், தொண்டர் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருக்கும் சம உரிமையும், கடமையும் உண்டு. நம்முடைய செயல்பாடுளில் உண்மை, நேர்மை, மக்கள் நலன் மட்டுமே நிறைந்திருக்கும். லஞ்சம் ஊழலை ஒழிப்பதற்கான அனைத்து வழிகளையும் கையாளுவோம். ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே நம் முதன்மைப் பணி குடிதண்ணீர், கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள இவை ஏழைகளுக்கு இலவசமாகவும், தரமாகவும் கிடைக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களும், பத்திரிகைகளும் ஒருசேர ஜல்லிக்கட்டு வேண்டும் என்று குரல் கொடுக்க அதை மத்திய மாநில அரசுகளால் கொண்டு வர முடிந்ததா? இவர்களா…

Read More Read More

ஏழைகளின் வாழ்க்கைத் தரம் எப்படி உயரும்? அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கிறதா? வேலை வாய்ப்புகள் கிடைகிறதா? விலைவாசிகள் தான் குறைந்துவிட்டதா? அடிப்படை வசதிகள் தான் கிடைக்கிறதா? எதுவுமே இல்லை என்கிற போது எதற்காக இங்கே அரசுகள் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தான் கோடிகளை குவிக்கிறார்களே தவிர பாமர மக்களுக்கு இந்த ஆட்சியால் எந்த பயனும் இல்லை. விடியல் வளர்ச்சி பேரணி ஒரு புதிய அரசியல் கலாச்சாரமாக உருவெடுத்திருக்கிறது. அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழலை அறவே ஒழிப்பதே நம் நோக்கம். லஞ்சம், ஊழல் ஒழிந்தால் வளர்ச்சித் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக போய்ச் சேரும். ஊழல் ஒழிந்தால் நாட்டில் தொழில்கள் பெருகும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் பெருகும். லஞ்சம் ஒழிந்தால்…

Read More Read More