விடியல் வளர்ச்சி பேரணி
விடியல் வளர்ச்சி பேரணியின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அதன் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் காக்கும் உரிமையும் கடமையும் உள்ளது.
- ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான செயல்பாடுகளே நம் தனித்தன்மை. இங்கே தலைவர், தொண்டர் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருக்கும் சம உரிமையும், கடமையும் உண்டு.
- நம்முடைய செயல்பாடுளில் உண்மை, நேர்மை, மக்கள் நலன் மட்டுமே நிறைந்திருக்கும்.
- லஞ்சம் ஊழலை ஒழிப்பதற்கான அனைத்து வழிகளையும் கையாளுவோம்.
- ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே நம் முதன்மைப் பணி
- குடிதண்ணீர், கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள இவை ஏழைகளுக்கு இலவசமாகவும், தரமாகவும் கிடைக்க வேண்டும்.
- தமிழ்நாட்டு மக்களும், பத்திரிகைகளும் ஒருசேர ஜல்லிக்கட்டு வேண்டும் என்று குரல் கொடுக்க அதை மத்திய மாநில அரசுகளால் கொண்டு வர முடிந்ததா? இவர்களா மக்களுக்கு நல் வாழ்வு தரப் போகிறார்கள்?
- தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சி புரிந்த அரசுகள் செய்த ஊழலினால் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.60,000ஃ-க்கும் மேல் கடன் சுமை ஏற்றப்பட்டிருக்கிறது
- அரசுத் திட்டங்களிலும், செயல்பாடுகளிலும் மக்கள் பங்களிப்பும் மக்கள் கண்காணிப்பும் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த செயல்களில் ஊழல் இருக்காது. தரமும் நிறைந்திருக்கும்.
- நேர்வழிதான் சிறந்த வழி. நேர்மையும், உண்மையும் எப்போதும் வெல்லும்.
- தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமையால், வேதனையோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர் சக்தி இங்கே வீணக்கப்படுகிறது.