விடியல் வளர்ச்சி பேரணி

விடியல் வளர்ச்சி பேரணி

விடியல் வளர்ச்சி பேரணி

37-B, Keela Street, Ichikamalaipatti, K.Sathanur Post,

Tiruchirappalli – 620 021. Tamilnadu.

Mobile: 98655 76210, Mail: vvp2015@rediffmail.com

விடியல் வளர்ச்சி பேரணி, இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி. தமிழக அரசியலிலே ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வெண்டும் என்ற நோக்கத்திலே ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கம். அரசியலிலே தூய்மையும், வெளிப்படைத் தன்மையும், நியாமும், நேர்மையும் நிலவ வேண்டும் என்பதே கொள்கை. இப்படிப்பட்ட கொள்கைகளின் மூலம்தான், இன்று நாட்டிலே புற்றுநோயாகப் பரவிக் கிடக்கும் லஞ்சம், ஊழல் நிர்வாக சீர்கேடுகளை விரட்ட முடியும். இக்கட்சி மா.விஜயமோகனாஜி என்பவரால் 01.01.2015 அன்று ஆரம்பிக்கப்பட்டது. மா.விஜய மோகனாஜி இக்கட்சியின் பொதுச் செயலாளராக தலைமை தாங்கி நிர்வகித்து வருகிறார்.

சுயநல நோக்கோடு, குறுக்கு வழியில் புகுந்து, எப்படியாவது தனக்கு ஆதாயம் தேடிக் கொள்ள வேண்டும் என்று பலரும் விரும்புவதால் தான் இன்று லஞ்சமும், ஊழலும் எல்லா துறைகளிலும் பரவிக் கிடக்கிறது. இளைஞர் சமுதாயத்தால் மட்டுமே, இந்த சமூகத் தீமையிலிருந்து நாட்டை மீட்க முடியும்.

இளைஞனே! லஞ்சமும் ஊழலும் உன்னுடைய பிரச்சனை இல்லை என்று நினைக்கிறாயா? இந்த சமூக தீமையினால், உன் பக்கத்து வீடு தீப்பற்றி எரியும்போது, உன் வீடு தீப்பற்ற எவ்வளவு நேரமாகும்? நீ எவ்வளவு படித்தாலும், பட்டம் பெற்றாலும, இந்த லஞ்சமும் ஊழலும் உன் கனவுகளை எல்லாம் அழித்துவிடும்.

குண்டும் குழியுமான, குறுகிய சாலைகள, லஞ்சம் ஊழலின் காரணமாக, ஒரு மழைக்கே தாங்காத சாலைகள், வாகனங்களை ஓட்டத்தெரியாதவர்களுக்கும், லஞ்சம் வாங்கிக் கொண்டு லைசென்ஸ் வழங்கும் ஆர்.டி.ஓ. அலுவலங்கள். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சரே கூட, ஆர்.டி.ஓ அலுவலக லஞ்சங்களை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பிரிக்க முடியாதது எது? என்றால் ‘ஆர்.டி.ஓ. அலுவலகமும் லஞ்சமும் என்று சொல்லாம்.

மாவட்டம் தோறும் ஆர்.டி.ஓ. எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கே லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது. “லஞ்சம் வாங்காத அலுவலகமோ, அலுவலரோ இருந்தால் அவரை அடையாளம் காட்டினால் தக்க சன்மானம் தருகிறோம்”; என்கிறார்கள் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தினர். அரசு அலுவலங்களில் எந்த அளவுக்கு லஞ்சம் தலைவிரித்து ஆடினால், இது போன்ற அறிவிப்புகள் வரும்.

இந்தியாவில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை : 422 இதில் தனியார் கல்லூரிகள் ஸ்ரீ 224. மொத்த எம்.பி.பி.எஸ் சீட் ஸ்ரீ 30,000. ஆ.னு சீட் ஸ்ரீ 9600, ஆடீடீளு சீட் விலை அதிகபட்சம் பெங்களுரில் ஸ்ரீ ரூ 1 கோடி. உத்திரபிரதேசத்தில் குறைந்த விலை ரூ 25-35 லட்சம் ஆ.னு. சீட் விலை ஸ்ரீ ரூ.3 கோடி.

புழங்கும் கருப்புப்பணம் ஆ.டீ.டீ.ளு. சீட் மூலம் ஸ்ரீ ரூ 9000 கோடி. ஆ.னு. சீட் மூலம் ஸ்ரீ ரூ 3000 கோடி இந்த துறையில் மட்டும் ஒரு ஆண்டில் புழங்கும் கருப்புப்பணம் ஸ்ரீ ரூ 12000 கோடி. இது ஒரு பத்திரிக்கை தகவல்.

மக்கள் குறை தீர்ப்பு மனுக்களுக்கு காலக் கெடுவுடன் ரசீது தரப்பட வேண்டும். காவல்துறை அல்லது மற்ற எந்த அரசுத்துறையானலும், மக்களின் புகார் மனுக்கள் எந்த தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற குறிப்போடு ரசீது தர வேண்டும்.

லஞ்சப் புகார்களுக்காகவே, தனியாக ஒரு தொலைபேசி எண் உருவாக்கப்படவேண்டும.; விரைவான நடவடிக்கைக்கு, தனி அமைப்பை உருவாக்க வேண்டும். லஞ்சப்புகார் அளித்தவர்களின் வேலைகள் தடையின்றி நடைபெற அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

கடந்த நவம்பர் மாதம் தாணே நகரில் “அதிகாரிகளின் லஞ்சப்பசிக்கு என்னால் தீணி போடமுடியவில்லை. அவர்கள் நச்சரிப்பு தாங்காமல் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று எழுதி வைத்துவிட்டு, ஒரு கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆளும் கட்சி அரசியல்வாதிகள் தான் லஞ்ச, ஊழலுக்கு காரணம் என்றாலும், அதிகாரிகள் அனைவரும் நேர்மையாளர்களாக அரசின் திட்டங்களை செயல்படுத்தினால், கொள்ளைகளை தடுத்து நிறுத்தினால், வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் தடைபட்டு போயிருக்குமா?

பெங்களுரு இந்திய நிர்வாகவியல் நிறுவனம் செய்த ஆய்வுப்படி அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறும் தொகை ஆண்டுக்கு ரூ.1,53,000 கோடி. இது அவர்களுக்கான ஊதியத்தைவிட 4 மடங்கு அதிகம்.

தற்போது குடிநீர் குழாய் இணைப்பு, நில அளவை, பட்டா, வீடுகட்ட அப்ருவல், வீட்டுக்கு வரிவிதிப்பு இப்படி எல்லா அரசு வேலைகளுக்கும் மக்கள் லஞ்சம் கொடுத்தாக வேண்டி உள்ளது. பஞ்சாயத்து, நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஏ.ழு. போன்ற அதிகாரிகள் என்று பலருக்கும் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும். எல்லா அரசு ஒப்பந்த வேலைகளுக்கும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கை கோர்த்து, 40,000 வரை கமிஷன் வாங்குகிறார்கள்.

கல்வி நிறுவனங்கள், மருத்துவ மற்றும் வியாபார நிறுவனங்கள் தொழில்நிறுவனங்கள் அனைத்தும் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. லஞ்சம் கொடுப்பதால், தைர்யமாக முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாக மாணவ, மாணவிகள் மற்றும் அப்பாவிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

லஞ்சம் ஊழல, ஆயுள் தண்டனை பெறும் குற்றமாக கருதப்பட வேண்டும். ஊழல் அரசியல்வாதிகள் அரசியல் கட்சிக்கு பொறுப்பேற்க தகுதியற்றவராக கருதப்பட வேண்டும். முக்கியமாக மக்கள் நேர்மையாளர்களை ஆட்சி அமைக்க செய்ய வேண்டும். செய்வார்களா?

 


விஜய மோகனாஜி,
பொதுச்செயலாளர்.
விடியல் வளர்ச்சி பேரணி

Comments are closed.