இளநிலை உதவியாளர்கள் மற்றும் வி.ஏ.ஓ உள்ளிட்ட 9350 காலி பணியிடங்களுக்கு 17 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வாணைய தேர்வு எழுதினார்கள். இதில் பி.ஹச்.டி பட்டம் பெற்றோரும் அடங்குவர். இன்னும், பலலட்சம் பேர் ‘வேலை கிடைக்காது‘ என்ற அவநம்பிக்கையால் தேர்வு எழுதாமல் இருந்திருக்கலாம். நாட்டில் வேலையில்லாத நிலைமை இப்படி இருக்க, மத்திய உயர் அமைச்சர், “பக்கோடா விற்பதும் ஒரு வேலை வாய்ப்புதான்” என்று பேசி இருக்கிறார்.
வேலையில்லாத பிரச்சனையை, வாழ்வாதார பிரச்சனையை எவ்வளவு துச்சமாக இந்த அரசுக்கள் எடுத்து கொள்கின்றன?