தொழிலாளர் தினம்…
“உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்,
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்..!! “
இன்று மே மாதம் 1ஆம் நாள். உலகத் தொழிலாளர் தினம்.
இந்த நாகரிக உலகை செதுக்கிய சிற்பிகளின் தினம்.
இந்த உன்னத நாளிலே இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டி இருக்கிறது. இன்று வேலையில்லாதவர்கள் அதிகம் வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது என்ற கசப்பான உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் அதிகம் வாழும் நாடும் இந்தியா தான். வேலையில்லாதவர்கள் அதிகம் வாழும் நாடும் இந்தியா தான். சமத்துவமற்ற பொருளாதாரம் இங்கே நிலவுகிறது. நாட்டின் 70% சொத்துக்களின் உடைமையாளர்கள் 57 பேர் மட்டுமே.
சுய வேலை வாய்ப்புகளும், புதிய வேலைகளும் குறைந்துக்கொண்டே வருகிறது. புதிய மோட்டார் வாகன சட்டப்படி, மோட்டார் வாகனங்களின் பழுது நீக்க, அந்த கம்பெனி சர்வீஸ் ஸ்டேஷன்களிலேயே விட வேண்டும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான தனிநபர் மற்றும் சாலையோர மோட்டார் ஒர்க்க்ஷாப்புகள் மூடப்படும் அபாயம் காத்திருக்கிறது.
வேலைவாய்ப்பின்மை முதலில் தனி மனித நிம்மதியையும், தன்மானத்தையும் இழக்க செய்யும். அதன்பின் ஒரு குடும்பத்தின் நிம்மதியை கெடுக்கும். அதன் பின் ஒட்டுமொத்த சமூகத்தின் நிம்மதியையும், அமைதியையும் கெடுத்துவிடும்.
என்ன செய்ய போகிறார்கள் மத்திய, மாநில அரசுக்கள்? மக்களை காப்பாற்றுவார்களா? அல்லது, வேலைவாய்ப்பின்மை என்ற சூறாவளிக்கு நம்மை இரையாக்கப்போகிறார்களா?