இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு…

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு…

படித்த, வேலை வாய்ப்புக்காக, முயற்சி செய்து கொண்டிருக்கும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தரவேண்டும் என்ற உயரிய கொள்கையினை அடிப்படையாக கொண்டு, விடியல் வளர்ச்சி பேரணி (VVP) இயங்கிக்கொண்டிருப்பதை அறிவீர்கள்.

இதற்க்காக, பல தொழில் நிறுவனங்களையும், சேவை நிறுவனங்களையும் சந்தித்து, சில வேலை வாய்ப்புகளை பெற்று, VVPஇன் Website மற்றும் Facebook பக்கங்களில் பதிவிட்டோம். இதன் மூலம் சில இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றார்கள்.

பல லட்ச படித்த, வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் இருக்கையில், சில வேலைவாய்ப்புகளை பெறுவதால் மட்டும், தமிழக இளைஞர்களின் பிரச்சனைகள் தீர்ந்து விட போவதில்லை. நாம் பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை பெற்று தரவேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்றுகிறோம்.

நாம் ஒன்றுபட்டால், உங்கள் ஒத்துழைப்பும் இருந்தால், நாம் பல ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடியாக, சில நாட்களில் உரிய வேலைவாய்ப்பை பெற்றுத்தரவேண்டும். பல IT நிறுவனங்களிலும், நம் கோரிக்கைகளை வைத்திருக்கிறோம்.

வேலைக்காக முயற்சிக்கும் இளைஞர்கள் சென்னை வந்தால், நாம் ஒரு குழுவாக இயங்கி, தொடர் முயற்சி செய்து, தொழில் நிறுவனங்களிலும், IT நிறுவனங்களிலும், அநேகம் பேருக்கு உரிய வேலைகளை பெறமுடியும். ஒரு சிறு கூட்டுமுயற்சியின் மூலம் நீங்கள் ஒவ்வொருவரும் பயனடைய முடியும்.

ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு என்பதை மனதில் வைத்து, நீங்கள் அலைபேசி அல்லது Facebook வாயிலாக தொடர்புகொண்டால், அமைதியான சாத்விகமான முறையில், உங்களுக்கான வேலைகளை பெற முடியும் என்று உறுதியாக கூறுகிறோம்.

இது முழுக்க முழுக்க 100% சேவையாக கருதி செய்யப்படுகிறது. இதற்காக நீங்கள் VVPக்கு செலவிட போவது எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இளைஞர் நலன் காக்கும் நம் முயற்சியில், நீங்களும் பங்கேற்க வேண்டும் என்று அன்போடு அழைக்கிறோம்.

விஜய மோகனாஜி
பொது செயலாளர்.

Comments are closed.