மழையினால் உற்பத்தி பாதிப்பு
இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவ மழை சென்னைவாசிகள் பலரையும் என்றென்றும் மறக்க முடியாத துயரத்தை அளித்தது. கனவுகளோடு வாங்கிய வீடுகள் எந்த அளவுக்கு வாழத் தகுதியற்ற இடத்தில் உள்ளது என்பதை கண்கூடாக கண்டனர். இழந்த உறவுகளும் பொருட்களும் உடமைகளும் என்றும் மறக்காது. பொது மக்களின் துயரம்தான் இப்படி என்றால் தொழில்துறையினரின் துயரங்கள் இதையும் விட கூடுதலாக இருக்கும் போலிக்கிறது. உதாரணமாக சமீபத்திய மழை அம்பத்தூர் தொழில் பேட்டையை சூழ்ந்து மூழ்கடித்தது. அம்பத்தூர் தொழிற்பேட்டை சுமார் 1500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 8000க்கும் மேற்பட்ட சிறிய நடுத்தர தொழில் நிறுவனங்களை கொண்டது. எல்லா உற்பத்தி கூடங்களிலும் இரண்டு அடி உயரத்திற்கு மழைத் தண்ணீர் நிற்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட பல லட்சங்கள் விலை மதிப்புள்ள…