ஏழைகளின் வாழ்க்கைத் தரம் எப்படி உயரும்? அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கிறதா? வேலை வாய்ப்புகள் கிடைகிறதா? விலைவாசிகள் தான் குறைந்துவிட்டதா? அடிப்படை வசதிகள் தான் கிடைக்கிறதா? எதுவுமே இல்லை என்கிற போது எதற்காக இங்கே அரசுகள் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தான் கோடிகளை குவிக்கிறார்களே தவிர பாமர மக்களுக்கு இந்த ஆட்சியால் எந்த பயனும் இல்லை.
விடியல் வளர்ச்சி பேரணி ஒரு புதிய அரசியல் கலாச்சாரமாக உருவெடுத்திருக்கிறது. அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழலை அறவே ஒழிப்பதே நம் நோக்கம். லஞ்சம், ஊழல் ஒழிந்தால் வளர்ச்சித் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக போய்ச் சேரும். ஊழல் ஒழிந்தால் நாட்டில் தொழில்கள் பெருகும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் பெருகும். லஞ்சம் ஒழிந்தால் மக்களுக்கு நிம்மதி கிடைக்கும். இன்று ஏதாவது ஒரு காரியமாக அரசு அலுவலகத்துக்கு செல்லவே அஞ்சுகின்ற நிலை இருக்கிறது. சமுதாய அநீதிகளை தட்டிக் கேட்க வேண்டிய இளைஞர்களும் மக்களும் ஏன் ஒன்று சேர்ந்து போராட மறுக்கிறார்கள். புலம்புவதால் மட்டும் நிலைமை சீராகுமோ? ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ இல்லையா?
விடியல் வளர்ச்சி பேரணி ஒரு மக்கள் விடுதலை இயக்கம். லஞ்சம், ஊழலிருந்து விடுதலை. சமூக அநீதிகளிலிருந்து விடுதலை. இளைஞர்கள் ஒன்று பட்டு இணைந்தால் அவர்கள் கனவுகள் எல்லாம் மெய்ப்படுமே.
மாவட்டம் தோறும் ஆர்.டி.ஓ. எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கே லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது. “லஞ்சம் வாங்காத அலுவலகமோ அலுவலரோ இருந்தால் அவரை அடையாளம் காட்டினால் தக்க சன்மானம் தருகிறோம்”; என்கிறார்கள் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தினர்
அரசு அலுவலங்களில் எந்த அளவுக்கு லஞ்சம் தலைவிரித்து ஆடினால் இது போன்ற அறிவிப்புகள் வரும்.