Browsed by
Category: Bribe

லஞ்ச ஊழலால் தடிப்பறிக்கப்படும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு

லஞ்ச ஊழலால் தடிப்பறிக்கப்படும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு

விடியல் வளர்ச்சி பேரணி, இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி. தமிழக அரசியலிலே ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வெண்டும் என்ற நோக்கத்திலே ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கம். அரசியலிலே தூய்மையும், வெளிப்படைத் தன்மையும், நியாயமும், நேர்மையும் நிலவ வேண்டும் என்பதே கொள்கை. எங்களுக்கு அரசியல் சித்தாந்தங்கள் இல்லை. நாங்கள் பொதுவுடமை தோழர்களும் அல்ல. தனியார் மய ஆதரவாளர்களும் அல்ல. உலக மயமாக்கல் ஆதரவாளர்களும் அல்ல. அரசு சேவைகள் லஞ்சம், ஊழல் இன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும். எங்களுடைய திறமையான நிர்வாக செயல்பாடுகள் மட்டுமே பேசப்படவேண்டும் என்பதே கொள்கை. வேலை வாய்ப்பில் தமிழகம் முன்னேற வேண்டுமானால், ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் நிறுவப்பட வேண்டும். லஞ்ச, ஊழல் இல்லாத நேர்மையான…

Read More Read More

விடியல் வளர்ச்சி பேரணி

விடியல் வளர்ச்சி பேரணி

விடியல் வளர்ச்சி பேரணி 37-B, Keela Street, Ichikamalaipatti, K.Sathanur Post, Tiruchirappalli – 620 021. Tamilnadu. Mobile: 98655 76210, Mail: vvp2015@rediffmail.com விடியல் வளர்ச்சி பேரணி, இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி. தமிழக அரசியலிலே ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வெண்டும் என்ற நோக்கத்திலே ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கம். அரசியலிலே தூய்மையும், வெளிப்படைத் தன்மையும், நியாமும், நேர்மையும் நிலவ வேண்டும் என்பதே கொள்கை. இப்படிப்பட்ட கொள்கைகளின் மூலம்தான், இன்று நாட்டிலே புற்றுநோயாகப் பரவிக் கிடக்கும் லஞ்சம், ஊழல் நிர்வாக சீர்கேடுகளை விரட்ட முடியும். இக்கட்சி மா.விஜயமோகனாஜி என்பவரால் 01.01.2015 அன்று ஆரம்பிக்கப்பட்டது. மா.விஜய மோகனாஜி இக்கட்சியின் பொதுச் செயலாளராக தலைமை தாங்கி…

Read More Read More

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே….

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே….

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இயங்கும் அமைப்பில், ரூ.350 கோடி ஊழல் என்று தொடரப்பட்ட ஒரு வழக்கில், மும்பை உயர்நீதி மன்ற நீதிபதி திரு.அருண் சவுத்ரி அவர்கள், அரசுத் துறையில் ஊழல் கொடூரமாக வளர்ந்து விட்டது, அடிப்படை வசதிகளை பெறக் கூட லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளார். அரசுத்துறை லஞ்சம் ஊழலை வெகுவாக சாடிய, மும்பை உயர்நீதி மன்ற நீதிபதி திரு.அருண் சவுத்திரி, ‘அரசுத் துறையில் நிலவும் லஞ்சத்தை ஒழிக்க, மக்கள் வரி செலுத்தாமல் ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும்’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார். சுயநல நோக்கோடு, குறுக்கு வழியில் புகுந்து, எப்படியாவது தனக்கு ஆதாயம் தேடிக் கொள்ள வேண்டும் என்று பலரும் விரும்புவதால் தான், இன்று லஞ்சமும், ஊழலும் எல்லா துறைகளிலும்…

Read More Read More

ஏழைகளின் வாழ்க்கைத் தரம் எப்படி உயரும்? அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கிறதா? வேலை வாய்ப்புகள் கிடைகிறதா? விலைவாசிகள் தான் குறைந்துவிட்டதா? அடிப்படை வசதிகள் தான் கிடைக்கிறதா? எதுவுமே இல்லை என்கிற போது எதற்காக இங்கே அரசுகள் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தான் கோடிகளை குவிக்கிறார்களே தவிர பாமர மக்களுக்கு இந்த ஆட்சியால் எந்த பயனும் இல்லை. விடியல் வளர்ச்சி பேரணி ஒரு புதிய அரசியல் கலாச்சாரமாக உருவெடுத்திருக்கிறது. அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழலை அறவே ஒழிப்பதே நம் நோக்கம். லஞ்சம், ஊழல் ஒழிந்தால் வளர்ச்சித் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக போய்ச் சேரும். ஊழல் ஒழிந்தால் நாட்டில் தொழில்கள் பெருகும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் பெருகும். லஞ்சம் ஒழிந்தால்…

Read More Read More

ஏன் லஞ்சமும் ஊழலும் ஒழிக்கப்பட வேண்டும்?

ஏன் லஞ்சமும் ஊழலும் ஒழிக்கப்பட வேண்டும்?

அரசின் திட்டங்களின் பலன்கள் ஏழைகளை சென்றடைய தடையாக இருப்பது நாட்டில் இன்று புற்று நோயாக பரவிக் கிடக்கும் லஞ்சமும் ஊழலும் தான. லஞ்சமும் ஊழலும் ஒழிக்கப்பட்டால் தான் ஏழைகள் மற்றும் நடுத்தட்டு மக்களின் வாழ்வு உயரும். ஆயிரக்கணக்கான உள்நாட்டு இளைஞர்கள் சிறு தொழில் துவங்க முன் வருவார்கள். “இந்தியாவில் செய்வோம்” என்ற திட்டமும் நிறைவேறும். வேலை வாய்ப்புகள் பெருகும். கல்வியும் வேலை வாய்ப்பும் ஏழைகளுக்கு தடையின்றி கிடைத்தால் தான் அவர்களுக்கு உண்மையான வளர்ச்சிகிட்டும். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் ஏழைகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிடப்படும் தொகையில் பாதிக்குபாதி ஊழல் வாதிகளுக்கு போய்விடுகிறது. இதை தடுத்து நிறுத்தினாலே அனைவருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க முடியும். இரண்டு லட்சம் கோடி கருப்புப்…

Read More Read More

அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள்

அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள்

தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. பொதுமக்களிடம் தாங்களே கைநீட்டி லஞ்சம் வாங்கிய நிலைபோய் இப்போது லஞ்சம் வாங்கிக் கொடுப்பதற்காகவே அங்கே வெளியாட்களை நியமித்திருக்கிறார்கள். அரசுப் பணியாளர்கள் போலவே இவர்கள் அந்த அலுவலகத்தில் வேலை செய்வார்கள். உதாரணமாக பத்திரப்பதிவு அலுவலகமாக இருந்தால் நிலமதிப்பை நிர்ணயம் செய்வது, ஆவணங்கள் தயார் செய்வது, பதிவாளரிடம் ஆவணங்களை விளக்கி கையெழுத்து பெறுவது, பேரம் பேசுவது என்று எல்லாமே இவர்கள் மூலமாகவே நடைபெறும். வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் தாலுகா அலுவலகங்கள் என்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்த இடைத்தரகர்களின் அட்டகாசங்கள் தாங்க முடியாது. லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டாலும் இந்த இடைத்தரகர்கள் தான் மாட்டுவார்களே அன்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தப்பித்து…

Read More Read More

அரசு அலுவலகங்களில் லஞ்சம்

அரசு அலுவலகங்களில் லஞ்சம்

ஆசிரியர் பணியிட மாறுதலில் 10000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யபட்டுள்ளனர். இடமாறுதலுக்கு ரூ 5 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுகிறது. இதுபோல அரசுத்துறை அனைத்திலும் குறிப்பாக வணிகவரித்துறை காவல்துறை பத்திரபதிவுதுறை சு.வு.ழு ஏ.ழு தாலுகா அலுவலகங்கள் ரெவினியூ துறை இதுபோன்ற பணம் புழங்கும் அனைத்து துறைகளிலும் வேண்டி இடம் மாறுதல் பெறுவதற்கு ரூ.10லட்சம் 20லட்சம் கூட லஞ்சம் பெறப்படுகிறது. இந்த தொகை உயர் அதிகாரிகளிலிருந்து மந்திரிகள் வரை செல்கிறது. இதனால் பொது மக்களுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கிறீர்களா? ஏன் இப்படி லஞ்சம் கொடுத்து முக்கிய இடங்களுக்கு மாறுதல் பெறுகிறார்கள்? அவர்கள் மொழியில் அதெல்லாம் நல்ல வருமானம் வரக்கூடிய இடங்கள். அதாவது லஞ்சம் அதிகமாக புழங்கக் கூடிய இடங்கள். இங்கு இடமாறுதல் பெற்றால்…

Read More Read More