ஏன் லஞ்சமும் ஊழலும் ஒழிக்கப்பட வேண்டும்?

ஏன் லஞ்சமும் ஊழலும் ஒழிக்கப்பட வேண்டும்?

அரசின் திட்டங்களின் பலன்கள் ஏழைகளை சென்றடைய தடையாக இருப்பது நாட்டில் இன்று புற்று நோயாக பரவிக் கிடக்கும் லஞ்சமும் ஊழலும் தான. லஞ்சமும் ஊழலும் ஒழிக்கப்பட்டால் தான் ஏழைகள் மற்றும் நடுத்தட்டு மக்களின் வாழ்வு உயரும். ஆயிரக்கணக்கான உள்நாட்டு இளைஞர்கள் சிறு தொழில் துவங்க முன் வருவார்கள். “இந்தியாவில் செய்வோம்” என்ற திட்டமும் நிறைவேறும். வேலை வாய்ப்புகள் பெருகும்.

கல்வியும் வேலை வாய்ப்பும் ஏழைகளுக்கு தடையின்றி கிடைத்தால் தான் அவர்களுக்கு உண்மையான வளர்ச்சிகிட்டும். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் ஏழைகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிடப்படும் தொகையில் பாதிக்குபாதி ஊழல் வாதிகளுக்கு போய்விடுகிறது. இதை தடுத்து நிறுத்தினாலே அனைவருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க முடியும்.

இரண்டு லட்சம் கோடி கருப்புப் பணம் இங்கே உள்ளது. அதைக் கொண்டு இருபது லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரலாம்.

ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி தமிழக வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. அதைத் தடுத்து நிறுத்தினால் 60 வயதைக் கடந்த ஏழைகள் அனைவருக்கும் ரூபாய் ஐந்தாயிரம் ஒய்வூதியம் வழங்கலாம்.

இந்தியாவுக்கு பின் சுதந்திரம் பெற்ற இந்தியாவையும் விட ஏழ்மையான மிகச்சிறிய நாடான சிங்கப்பூரில் எந்த இயற்கை வளமும் கிடையாது. இருப்பினும் லஞ்சத்தையும் ஊழலையும் அறவே ஒழித்து வியாபாரத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு சிங்கப்பூர் முன்னேறியது. வளம் கொழிக்கும் நாடானது. ஊழல் பெருச்சாளிகளை ஆளவிட்டு நாம் வேடிக்கை பார்க்கும் வரையில் தமிழகம் முன்னேறாது. ஏழைகள் வாழ்வும் முன்னேறாது.

தகவல் தொழில் நுட்பத்தில் சிறந்த இளைஞர்களின் சேவைகளை வரவேற்கிறோம்.
விடியல் வளர்ச்சி பேரணி
விஜயமோகனாஜி

Comments are closed.