சென்னையில் சுகாதாரம்
சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி தொடங்கி இருபது நாட்களுக்கும் மேலாக விட்டு விட்டு பெய்த வரலாறு காணாத கன மழை தற்போது சற்றே ஒய்திருக்கும் நிலையில் துப்புரவு பணிகள் இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஏரிகள் குளங்கள் கால்வாய்கள் போன்றவற்றின் முக்கியத்துவம் தெரியாமல் சுயநல நோக்கோடு அவைகளில் பலவற்றை அழித்ததோடு அல்லாமல் இருக்கின்ற சில ஏரிகள் ஆறுகள் கால்வாய்களையும் சரியாக பராமரிக்காமலும் ஆழப்படுத்தி தூர்வாரி கரைகளை பலப்படுத்தாமலும் இருந்ததால் மிகுந்த வெள்ள சேதத்தையும் ஏற்படுத்தி கிடைத்தற்கரிய மழைநீர் வீணாக கடலில் கலந்தது. அரசியல் வாதிகளின் பேராசையாலும் ஊழலினாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர். சென்னை நகரின் அனைத்து சாலைகளிலும் தேங்கிய மழைநீர் சாக்கடை நீர் மற்றும் குப்பைகளுடன் கலந்து எங்கும்…